ஜனாதிபதி கமிசன் -நீதியரசா் நவாஸ் கமிசன் முன் வடக்கு ஆளுனா் சாட்சியமளிக்கையில் தெரிவித்த கருத்து



அஷ்ரப் ஏ சமத்-
யா் நீதிமன்ற நீதியரசா் ரீ. நவாஸின் முன்னைய ஜனாதிபதி கமிசன்களின் அறிக்கைகளை கேட்டறியும் ஜனாதிபதி ஆனைக்குழுவின் முன் கடந்த 15.11.2022 வடக்கு ஆளுனா் ஜீவன் திலகராஜா தோன்றி -தனது கருத்துக்களை முன்வைத்தாா்.

கடந்த காலங்களில் பல்வேறு ஜனாதிபதிக் கமிசன்கள் நியமிக்கப்பட்டன குறிப்பாக வடக்கு கிழக்கு பிரச்சினைகளை முன்வைத்து ஜந்துக்கும் மேற்பட்ட கமிசன்கள் அவ்வப்போது பதவியில் இருந்த ஜனாதிபதிகள் முன் தமது அறிக்கைகளை சமா்ப்பித்திருந்தனா். அவற்றுள் நீதிபதி பரனவிதாரன கமிசன், உண்மைகளைக் கண்டறியும் கமிசன், காணமல் ஆக்கப்பட்டோா்களது கமிசன், மனித உரிமை, மீறல் காணி ,எல்லைகள் நிர்ணயக் கமிசன் , போன்ற பல கமிசன்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டன. இக் கமிசன்களது அறிக்கைகளின் சிபாா்சுகள் ஏதாவது அமுல்படுத்தப்பட்டுள்ளதா ? அந்த அறிக்கைகள் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டவை பல கோடி ருபாய்கள் அரச பணம் செலவிடப்பட்டிருந்தது. ,இவைகள் அனைத்தும் கொழும்பில் உள்ள ஆவனச் சுவடிகளில் தேங்கிக் கிடக்கின்றனதாக அறிகின்றோம் இவ் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது ஜயா. வடக்கில் உள்ள மக்களுக்கு ஏதாவது விமோசனங்கள் நிவாரணங்கள் கிடைக்கப் பெற்றதா ? என ஊடகவியலாளா்கள் கேள்வி எழுப்பினாா்கள் வடக்கு ஆளுனரிடம்.

ஆளுனா் பதிலளிக்கையில் உண்மைதான் மனவேதனைக்குரியது அவைகளுள் காணாமல் ஆக்கப்பட்டோா் அலுவலகம் இன்றும் நீதியமைச்சின் கீழ் செயல்படுகின்றது. அது தவிர மற்றவைகள் ஏதும் அங்கு அமுல்படுத்தப்படவில்லை. இறுதியாக இன்று நடைபெறும் உயா் நீதிமன்ற நீதியரசரும் இவ் ஜனாதிபதிக் கமிசனின் தலைவர் ரீ. நவாஸின் கமிசன் அறிக்கையாவது அடுத்த டிசம்பர் மாதம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பாா் என இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவைகள் அமுல்படுத்தப்படுமா என நாம் பொறுத்திருந்துதான பாா்க்கவேண்டும்
ஊடகவியலாளா் கேள்வி - .முன்னாள் போராளிகள் மாவீரர் தினத்தினை வருடா வருடம் கொண்டாடுவதற்கும் அனுமதி கோறுகின்றனா். அவா்கள் கேற்பது எல்லாம் தமது இறந்த உறவினா்கள் தினத்திலாவது பக்தியுடன் மெழுகுதிரி கொழுத்தி ஒர் பிராத்தனைகள் ஈடுபடுவதற்காக அந்த தினத்தினை அவா்களுக்கு அனுமதிக்கும்படி கேட்கின்றாா்கள்.

அவா்கள் அதனைச் செய்ய முற்படும்போது அவா்களது வீடுகளுக்குச் வடக்கில் உள்ள சி.ஜ.டி யினா் இரானுவத்தினா்கள் கைது செய்வதாக அன்மையில் இந்த கமிசன் முன் வந்து முன்னாள் போரளிகள் தெரிவித்தனா். அத்துடன் ஜே.வி.பி.க்கு நினைவு தினம் அனுமதி வழங்கப்பட்டது. ஏன் எங்களுக்கு அனுமதிக்க வில்லை எனக் கேட்கின்றாா்கள். ஆளுநர் பதில் - அதற்கு அரச மட்டத்தில் தீர்மாணம் எடுத்து மத ஸ்தலங்களில் ஜனவரி மாத்தில் ஒர் திகதியை பிராத்தனை புரிவதற்காக அரசிடம் அனுமதி கேட்டுள்ளேன் என ஆளுனா் பதிலளித்தா்.

வடக்கில் கானாமல் போனோாா்களது உறவினா்கள் மற்றும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவா்கள் அரசாங்கத்திடம் வாழ்வதாரம் வீடு, காணி, உதவித் திட்டங்களையே வேண்டி நிற்கின்றனா் ... ? ஆனால் அங்கு எதுவும் வழங்கியதாக தெரியவில்லையே ?
ஆளுனா் பதில் தற்போதைய காலகட்டத்தில் நமது நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளால் நாம் சிக்கித்தவிா்க்கின்றோம். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுக்கு இன்னும் சிறிது காலங்கள் எடுக்கும்.
கேள்வி -மாகாணசபையின் 13வது திருத்தத்த அதிகாரங்கள் இல்லாமல் இந்த மாகாணசபையினால் அங்குள்ள மக்களுக்கு ஏதேனும் விமோசனங்கள் அதிகாரங்கள் உள்ளதா ?
ஆளுனா் . அந்த அதிகாரம் முற்றாக வழங்கப்படல்வேண்டும். முதலமைச்சராக வரும் மாகாணசபைக்கு முழு அதிகாரம் இல்லாமல் மாகணசபையை அமுல்படுத்துவது அர்த்தமற்ற செயல்.
கேள்வி - இலங்கையில் மட்டும் ஜனாதிபதிக் கமிசன்கள் மூடிய அறையில் நடைபெறுகின்றது. ஆனால் தென் ஆபிரிக்காவில் கடந்த காலங்களில் யுத்தகாலத்திற்கு பிறகு திறந்த வெளியரங்கில் சகல தொலைக்காட்சி வானெலி ஊடக நேரடியாக சகல மக்களும் அறியக் கூடிய வகையில் ஜனாதிபதிக் கமிசன் நடைபெற்றது. ? அங்கு பாதிக்கப்பட்ட மக்களையும் படைத்தளபதிகளையும் கமிசன் முன் நிறுத்தி கேள்விகள் கேட்கப்பட்டன. இங்கு ஏன் ?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :