விளையாட்டு வீரர்கள் போதைப்பொருள் பாவனையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.



சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் எஸ்.எல்.சபூர்தீன்

அஸ்ஹர் இப்றாஹிம்-
விளையாட்டுத்துறையில் ஈடுபடும் இளைஞர்கள் விளையாட்டுத்துறையுடன் மட்டும் தம்மை ஸ்திரப்படுதிக் கொள்ளாமல் சமூக சேவைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் 16 வது வருடாந்த பொதுக் கூட்டம் சாய்ந்தமருது ஸீபிரீஸ் ரெஸ்ரோரன்டில் இடம்பெற்ற போது அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் எஸ்.எல்.சபூர்தீன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
இன்று இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதிலும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீங்கான விளைவுகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
விளையாட்டு துறையில் ஈடுபடும் இளைஞர்கள் அந்த துறையில் தம்மை முழுமையாக ஈடுபட்டு அந்த துறையில் அதிக உச்ச நிலையை அடைந்து தமது எதிர்காலத்திற்கு தேவையான ஸ்திரமான நிலைமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து விளையாட்டை பொழுது போக்காக கருதி அதில் நாளையும் பொழுதையும் பணத்தையும் வீண்விரயம் செய்து எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் இறுதியில் களவு ,கொள்ளை, கொலை மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கு அடிமையாகி தமது வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனர்.
சிறந்த பயிற்ச்சியுடன் பூரண உடற்தகுதியுடன் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் உச்சத்தை அடைந்து சாதனை படைக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
என்று தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :