இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அனுசரணையில் கொழும்பு 7, தர்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் மேம்பாட்டு ரக்பி போட்டியில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மகளிர் ரக்பி அணி சம்பியனாகவும், கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக மகளிர் ரக்பி அணி இரண்டாம் இடத்தையும், சப்ரகமுவ பல்கலைக்கழக மகளிர் ரக்பி அணி மூன்றாம் இடத்தையும் வென்றன.
இந்த போட்டியில் மொத்தம் எட்டு பெண்கள் அணிகள் பங்கேற்றன. இதற்கு முன்னர் கண்டி, காலி மற்றும் கொழும்பில் மூன்று போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் நான்கு ரக்பி போட்டிகளில் இறுதிச் சுற்று கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போதே இந்த முடிவுகள் கிடைக்கப்பெற்றது.
தங்களது திறமையான வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்ட காலங்களில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக கொழும்பு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மாவட்ட மட்டத்தில் ரக்பி போட்டிகளுக்கு அனுசரணை வழங்கியது. பிராந்தியத்தில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் நட்பு நாடுகளின் இளைஞர்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ் இந்த அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment