ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களின் சீகிரியாவிற்கான ஒரு நாள் கல்விச் சுற்றுலா


எஸ்.அஷ்ரப்கான்-
க்கரைப்பற்று வலய, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களின் சீகிரியாவிற்கான ஒரு நாள் கல்விச் சுற்றுலா கடந்த சனிக்கிழமை (12) அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் இடம்பெற்றது.
பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் சீகிரியாவை பார்வையிட்டனர்.
மாணவர்களுக்கு காசியப்பன் மன்னனின் வரலாறு மற்றும் சீகிரியா காடு தொடர்பாக ஆசிரியர் எம்.எஸ்.எம்.அன்வர் விளக்கங்களை வழங்கினார்.

சிகீரியா சுருக்க வரலாறு.

சிகிரியா அல்லது சிங்ககிரி என்பது இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ள நகருக்கு அருகில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால பாறைக் கோட்டை ஆகும்.

இது சுமார் 180 மீட்டர் (590 அடி) உயரமுள்ள பாறையின் பாரிய நெடுவரிசையால் ஆதிக்கம் செலுத்தும் வரலாற்று, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளமாகும்.

பழங்கால இலங்கை வரலாறான சூலவம்சத்தின் படி, இந்த பகுதி ஒரு பெரிய காடாக இருந்தது. பின்னர் புயல்கள் மற்றும் நிலச்சரிவுகளுக்குப் பிறகு அது ஒரு மலையாக மாறியது மற்றும் காசியப்பன் மன்னனால் (கி.பி 477 - 495) தனது புதிய தலைநகருக்காக குறித்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர் தனது அரண்மனையை இந்த பாறையின் மேல் கட்டினார். அத்தோடு அதன் பக்கங்களை வண்ணமயமான ஓவியங்களால் அலங்கரித்தார்.

இந்தப் பாறையின் பக்கவாட்டில் ஒரு சிறிய பீடபூமியில் அவர் ஒரு பெரிய சிங்கத்தின் வடிவத்தில் ஒரு நுழைவாயிலைக் கட்டினார். இந்த அமைப்பிலிருந்து இந்த இடத்தின் பெயர் சிங்ககிரி, சிங்கப் பாறை என குறிப்பிடப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :