நிந்தவூரில் அல் - அஷ்றக் சாதனையாளர்களுக்கு ஊரே மகுடம் சூட்டிய விழா



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
தேசிய ரீதியில் வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டிய நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை வீரர்கள் மற்றும் சாதனையாளர்களை வாழ்த்தி, கௌரவித்து, நிந்தவூர் மண்ணே மகுடம் சூட்டி கொண்டாடிய விழா நேற்று (08) செவ்வாய்க்கிழமை பாடசாலை இருந்து வீதி ஊர்வலமாக இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கபடிப் போட்டியில், பாடசாலை வரலாற்றில் அகில இலங்கை மட்டத்தில் முதல் முறையாக தடம் பதித்து வெள்ளி பதக்கத்தை தனதாக்கிய 17 வயது கபடி அணியினர், வெண்கலப் பதக்கம் வென்ற 20 வயது கபடி அணியினர் மற்றும் அகில இலங்கை தமிழ் தினப் போட்டி முஸ்லிம் நிகழ்ச்சி - நாடகப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த மாணவர்களும் என மாலை அணிவித்து வாழ்த்து மழை பொழிந்து கௌரவிக்கப்பட்டனர்.

சாதனை நிலைநாட்டிய மாணவர்களை நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இருந்து மாலை அணிவித்து, பேண்ட் வாத்தியங்கள் முழங்க நிந்தவூர் பிரதான வீதியூடாக அழைத்து வரப்பட்டனர்.

இதன் போது நிந்தவூர் பிரதேச செயலாளர். சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப் உட்பட பிரதேச செயலகத்தில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் வீதிக்கு வந்து மாணவர்களை வாழ்த்தி வரவேற்றதோடு, குளிர்பானங்கள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

அத்தோடு, நிந்தவூர் பிரதான வீதி ஊடாக நடைபவனியாக வாழ்த்துக் கூறி வரவழைக்கப்பட்ட வெற்றி வீரர்கள் மற்றும் ஆசிரியர்களை பாடசாலை முன்றலில் சகல மாணவர்கள் மற்றும் மாணவிகளும் கரகோஷம் செய்து வரவேற்றதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சகல வெற்றி வீரர்களும் வாகனத்தில் ஏற்றப்பட்டு, வாகனப் பேரணி மூலம் நிந்தவூரின் சகல உள் வீதிகள் ஊடாக ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம் சஹ்துல் நஜீம், உடட்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித், சமாதானக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம் ரஸீன், நிந்தவூர் OIC எம். நஜீப், சேவைக்கால ஆலோசகர் யூ.எல்.எம். இப்றாஹீம், (உடற்கல்வி) பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் இல்யாஸ் இக்பால், பழைய மாணவர் சங்க செயலாளர் எப்.எச்.ஏ. சிப்லி மற்றும் உதவித் தலைவர் அறுப் அர்ஷாத் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு நிறைவேற்று குழு உறுப்பினர்கள் ,பழைய மாணவர்கள் சங்க நிறைவேற்று குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பிரதி உதவி அதிபர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எம் அனஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :