கல்முனை கல்வி வலய கமு/ கமு/லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்திற்கு கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கணினி அன்பளிப்பு செய்துள்ளார்.
கமு/ கமு/லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடன் இப் பாடசாலையின் அதிபர் எம் .ஐ. சம்சுதீனால் கணினி ஒன்றின் தேவை குறித்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய கணினி ஒன்றை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் இடம் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவரது இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர் எஸ் எம். சுஜான், பாடசாலை ஆசிரியர் முகம்மட் பாயிஸ், ஆசிரியர் ஏ.ஏ.ரஹ்மான் ஆகியோருடன் முன்னாள் முதல்வரின் இணைப்புச் செயலாளர்களான ஏ.எல்.எம்.இன்சாட் , ஏ.ஜி.எம். நிம்ஸாத் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment