வைத்தியசாலைகளில் மாத்திரம் செறிவாக்கப்பட்டு இருக்கின்ற பற்சிகிச்சை நிலையங்களை பரவலாக்கி பல் வைத்திய நிபுணர்களின் சேவையை சமூக மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வரைவு தொடர்பான கலந்துரையாடல் இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மெலிண்டன் கொஸ்தா பங்குபற்றினார். மேலும் இந்நிகழ்வில் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம் பீ ஏ வாஜித், கல்முனைப்பிராந்திய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் எம்.சீ.எம். மாஹிர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவு தலைவர்கள், வைத்திய அத்தியட்சகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொறுப்பு வைத்திய அதிகாரிகள், உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் வாய் சுகாதாரப் பிரிவினை மேம்படுத்தி தரமான சேவைகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் பல் வைத்திய நிபுணர்களினால் தனித்தனியான முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பேராசிரியரும் விசேட மகப்பேற்று நிபுணருமான எம். திருக்குமார் விசேட விரிவுரை ஒன்றை நிகழ்த்தியதுடன் குழந்தை மருத்துவ விசேட வைத்திய நிபுணர் எஸ்.என் ரொசாந்த் விசேட விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார். குறித்த நிகழ்வினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய் சுகாதார பிரிவின் பிராந்திய பற்கிச்சை நிபுணர் எம். எச். எம் சரூக் இணைப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment