எகிப்தில் இடம்பெற்று வரும் காலநிலை உச்சி மாநாட்டில் (COP - 27)
பங்கேற்க அந்நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐநா செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டரஸ் அவர்களை இன்று (7) கெய்ரோவில் சந்தித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் இந்த சந்திப்பின் போது ஐநா செயலாளர் நாயகத்திடம் ஜனாதிபதி விபரித்தார்.
ஜனாதிபதியின் தலைமையில் எகிப்து சென்றுள்ள இந்த தூதுக்குழுவில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், காலநிலை மாற்றம் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜயவர்தன ஆகியோரும் இந்த உலகத்தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் தினுக் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியக செயலாளர் சந்திரா பெரேரா ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.
0 comments :
Post a Comment