சமூக வலைத்தளங்களை கையாளும் முறை தொடர்பான பயிற்சி பட்டறைகள் கிழக்கு மாகாணம் எங்கும் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கைஉள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் undp நிறுவனத்தின் அனுசரணையில், சிடி எல் ஜி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் செயல்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்களில் 50 வயதுக்கு குறைந்த ஆண் பெண் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்காக இப் பயிற்சி பட்டறைகளை நடாத்தி வருகின்றது.
அம்பாறை மாவட்டத்துக்கான முதல் பயிற்சி பட்டறை அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் இன்று (2) புதன்கிழமை நடைபெற்றது.
அங்கு சமூக வலைத்தளங்களை கையாளுதல் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
செயற்திட்ட உத்தியோகத்தர் ஜெனி நடராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வளவாளராக ரெமோ செஹான் சிறப்பாக செயற்பட்டார்.
நாளை மூன்றாம் திகதியும், நாளை மறுதினம் நான்காம் திகதி யும் முறையே மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இப் பட்டறைகள் நடாத்தப்பட இருக்கின்றது.
0 comments :
Post a Comment