கல்முனை பிராந்திய சுகாதர சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போசாக்கு திட்டத்தின் கீழ் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அறுவடையைத் தொடர்ந்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் நிந்தவூர் ஆயுள்வேத வைத்தியசாலையில் மூலிகை செடிகள் நடப்பட்டதுடன் கடந்த மூன்று மாத காலத்திற்கு முன் நடப்பட்ட மரங்கள் மற்றும் மூலிகை செடிகளில் அறுவடை செய்யப்பட்டு அக்கறைப்பற்று மருந்து உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ நபீல் உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பங்குபற்றினார்கள்.
0 comments :
Post a Comment