கலைஞர்களின் தரவுத்தளத்தை தாபித்தலும் இற்றைப்படுத்தலும் வேலைத்திட்டம் ஆரம்பம்



நூருல் ஹுதா உமர்-
புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சானது, கலைஞர்களின் தரவுத்தளத்தை தாபித்தலும் இற்றைப்படுத்தலும் மூலம் செயற்படுத்தப்படும் கலைஞர்களுக்கான ஒரு தரவுத்தளத்தை தாபித்தல் மற்றும் இற்றைப்படுத்தல் பற்றிய கருத் திட்டத்தின் கீழ் கலைஞர்களை ஒன்லைன் ( Onine ) ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் கலைஞர்களின் தகவல்களை திரட்டும் நோக்கில் தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனை www.heritagemgiv.lk எனும் இணையத்தளம் ஊடாக அல்லது My Heritage எனும் Mobile Application மூலமாக கலைஞர்கள் தாங்களாகவே பதிவுசெய்து கொள்ளமுடியும். அதற்கான விளம்பர சுவரொட்டிகள் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் கலாசாரப் பிரிவு விளம்பர பலகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜமீல் காரியப்பர், மற்றும் இறக்காமம் பொதுநூலகம், கிராம சேவை உத்தியோகத்தர்கள், கலை மன்ற உறுப்பினர்களுக்கு கலாசார உத்தியோகத்தர்களான எம்.ஏ. நௌபீஸா, ஏ.எல்.பரீனா மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

www.heritage.gov.lk என்ற இணைத்தளத்தில் பிரவேசித்து கலைஞர்கள் பதிவு செய்து கொள்ள முடியும். பதிவு செய்து கொள்ளும் கலைஞர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் இலவசமாக பெற்றுக்கொடுக்கப்படும். இதன் ஊடாக சந்தை வாய்ப்புகளும் உருவாகும் . கலை ஆக்கங்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் கலைஞர்களின் கலை சார்ந்த தொழிலை பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :