அகில இலங்கை தேசிய மட்ட சித்திரப் போட்டிக்கு சம்மாந்துறை வலயத்தில் இருந்து மூன்று சித்திரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த மூன்று மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் நேற்று நேரில் சென்று வாழ்த்தினார்.
சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்தில்
எம்.எம்.மொகமட் அஸ்மல் எம்.ஆர்.எவ். சதீஹா சஹானி
ஆகிய இரண்டு மாணவர்களும் தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் ஏ.ஆர்.நகீஷ் என்ற மாணவரும் தேசிய மட்டத்தில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 2022.11.06ம் திகதி தேசியமட்ட போட்டிக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களையும் நேற்று வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர், பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், உதவிக்கல்வி பணிப்பாளர் யூ.எல். றியால், சம்மாந்துறை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சபூர்தம்பி, சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். அப்துல் முனாப் ஆகியோர் வெற்றியீட்டிய மாணவர்களை நேரில் சென்று வாழ்த்துக்கள் கூறி கௌரவித்தனர்.
0 comments :
Post a Comment