வெளியிடப்பட்ட க.பொ.த.சாதாரணதர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி வரலாற்றில் 18 மாணவர்கள் சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
உயர்தர உயிரியல் , கணிதம் , தொழில்நுட்பம் , கலை மற்றும் வர்த்தக துறைகளில் கல்வி பயில்வதற்கு அதிகளவிலான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன் இப் பரீட்சை முடிவுகள் எதிர்காலத்தில் இப் பாடசாலை கல்வி வரலாற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தெரிவித்தார்.
இதே வேளை பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தில் 6 மாணவர்களும் , தேத்தாத்தீவு மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்களும் , செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 4 மாணவர்களும் , கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் மற்றும் பெரியகல்லாறு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தலா 2 மாணவர்களும் , சிறி சக்தி மகா வித்தியாலயம் மற்றும் துறைநீலாவணை மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு மாணவருமாக மொத்தம் 40 மாணவர்கள் சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment