வரவு செலவுத்திட்ட உரையில் உப தவிசாளர் சுலைமாலெவ்வை தெரிவிப்பு!
*நிந்தவூர் பிரதேச கடலரிப்பினைத் தடுப்பதற்கான நிரந்தர நடவடிக்கைகள் ஆரம்பம்.*ஆறரைக்கோடி செலவில் கேள்விப்பத்திரம் மூலம் வேலைகளை ஆரம்பிக்க ஒப்பந்த காரரிற்கு அனுமதி
*நிந்தவூர் அலியாண்ட சந்தி வீதிப்புனர் நிர்மாணம் அடுத்த வாரம் ஆரம்பம்.
*நிந்தவூர் வெட்டுவாய்க்கால் அபிவிருத்தி : மக்கள் பிரயோசனப்படும் பிரதேசமாக மாற்றப்படும்
எனது அரசியல் வாழ்க்கையில் கிணற்றுத்தவளை அரசியல் கலாச்சாரத்தினை ஒரு போதும் என்னால் செய்ய முடியாது. நிந்தவூரையும் ஏனைய அயல் கிராமங்களையும் நேசித்து இன மதம் பேதம் பாராமல் அரசியல் செய்த அரசியல் சிங்கம் மர்ஹூம் எம்.எம்.முஸ்தபா அவர்களின் அரசியல் பாசறையில் அரசயல் பயணத்தை தொடர்ந்தவன் என்ற அடிப்படையில் ஊரின் அபிவிருத்தியிலும், மக்களின் நலனிலுமே கவனம் செலுத்துவேன் என நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை தெரிவித்துள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபையின் 2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரை நிகழ்த்துகையில் ;
நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக நடைபெற்று வந்த தொடர் கடலரிப்பிற்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தது யாவரும் அறிந்த விடயமாகும். அந்த வகையில் இதற்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆறரைக் கோடி ரூபா செலவில் நிரந்தர தடுப்புச் சுவர் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன். தற்போது அதற்கான வெற்றி கிடைத்துள்ளதுடன் வேலைகளை ஆரம்பிப்பதற்கான கடிதத்தினையும் குறிப்பிட்ட ஒப்பந்தக்காரரிடம் கையளித்துள்ளேன். இதற்காக முழு ஒத்துழைப்பை தந்த பிரதேச சபை தவிசாளர் அஷ்ரப் தாஹீர் சபையின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆர்.ஏ.எஸ். ரணவக்க, மற்றும் விசேட பொறியியலாளர் குழு, பிராந்திய பொறியியலாளர் எம்.துளசிதாசன், மற்றும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
மேலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிந்தவூர் அலியாண்ட சந்தி வீதிப்புனர் நிர்மாணமானது அடுத்த வாரம் ஆரம்பபிக்கப்படவுள்ளது. உண்மையில் இப்பிரதேச மக்களின் நலனில் அக்கறை கொண்டு இதற்கான அனுமதியை வழங்கிய வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் V. கருணாநாதன், பிரதம பொறியியலாளர் P.பரமலிங்கம் ராசமோகன் , கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர்முஹம்மட் முனாஸ் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள் அனைவரிற்கும் நன்றிகள். உண்மையில் இது மிகப்பெரும் பங்காகும். இன்ஷா அல்லாஹ் இந்த வீதியை புனரமைத்து மக்கள் பாவனைக்கு வழங்குவது எனது தலையாய கடமையாகும்.
அத்துடன் மிக நீண்டநாள் திட்டங்களில் ஒன்றான நிந்தவூர் வெட்டுவாய்க்கால் வீதி மேலும் அழகு பெறவுள்ளது. கடந்த காலங்களில் குறிப்பாக இரவு வேளைகளில் கொள்ளைக்காரர்கள் மற்றும் கள்வர்களின் நடமாட்டத்தால் இவ்வீதியில் வசிக்கும் மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்தனர். தற்போது இந்த வீதிக்கு நவீன மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் இவ்வீதி எதிர்காலத்தில் காபட் வீதியாக அமைத்து நிந்தவூர் கடற்கரை வரை கொண்டு செல்லவுள்ளேன். அத்துடன் எனக்கு கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தினை வைத்து ஊரிற்குள்ளும், ஊரிற்கு வெளியேயும் பல பணிகளை புரிந்து வருகின்றேன். எனது அரசியல் காலத்திற்குள் வெறும் கிணற்றுத்தவளையாக இருந்து அரசியல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத் திட்ட நிகழ்வானது நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment