கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் இலவச கண் பரிசோதனை முகாமொன்று ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்றது.
கண்களில் வெள்ளை படர்தல், கண்புரை நோய் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியே இப் பரிசோதனை முகாம் இடம்பெற்றது.
இலங்கை எமிஸ் நிறுவனத்தின் அனுசரணையில் மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த குறித்த கண் பரிசோதனை முகாமில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட நபர்கள் கண்களை பரிசோதனை செய்ய வருகை தந்தனர்.
இதில், அறுபதுக்கும் மேற்பட்ட நபர்கள் சத்திர சிகிச்சை பெற்றுக் கொள்ள அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான சத்திர சிகிச்சை விரைவில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும் என்றும் எமிஸ் நிறுவன இணைப்பாளர் எஸ்.எச்.அறாத் ஸஹ்வி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment