கல்முனை வலயக்கல்வி பிரிவில் உள்ள கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்து கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் என்.எம்.நப்றத் என்ற மாணவன் 9A சித்திகளைப் பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் கடந்த வருடம் (2021ம் ஆண்டு) முதன்முதலாக க.பொ.த சாதரண தர பிரிவு ஆரம்பிக்கப்பட்டதுடன் அண்மையில் க.பொ.த சாதரண தர பெறுபேறுகள் வெளியாகிய நிலையில்
மாணவன் என்.எம்.நப்றத் அனைத்து பாடங்களில் 9A சித்தி பெற்று பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதோடு மற்றுமொரு மாணவி எஸ்.எச்.பாத்திமா ஹிறா 7A ,2B என்ற சித்தியயைப் பெற்றதுடன் அதிகமான மாணவர்கள் திறமை மிக்க சித்திகளையும் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தெரிவித்தார்.
க.பொ.த (சா/த) பிரிவை ஆரம்பிப்பதில் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்கள் எடுத்தமுயற்சியும், அவரோடு இணைந்து இவ் வெற்றிக்காக அயராது உழைத்த, பாடசாலை ஆசிரியர்கள்,பாடசாலை
அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பொது மக்கள் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவிக்கின்றனர் .
மேலும் கல்முனை வலயகல்வி அலுவலகத்தின் பாடசாலைகளின் க.பொ.த சாதரண தர பெறுபேறுகளின் வலய தரப்படுத்தலின் படி நான்காவது இடத்தில் குறித்த கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பாடசாலையில் முதன்முதலாக க.பொ.த சாதரண தர பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் (2021) குறித்த வலய மட்ட பாடசாலைகள் தரப்படுத்தலில் நான்காவது இடத்தை பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
0 comments :
Post a Comment