இலங்கை தேசிய விஞ்ஞான நிறுவகத்தினால் (National science Foundation) வழங்கப்பட்ட இவ்வாண்டுக்கான "சிறந்த விஞ்ஞான மேம்பாட்டு ஆசிரியர்"(National award for the best science teacher 2022) இற்கான தேசிய விருதினை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி , இரசாயனவியல் ஆசிரியர் எஸ்.தேவகுமார் பெற்றுள்ளார்.
கல்வி அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கிளை அத்துடன் தேசிய
நீர்வழங்கல் வடிகால் வாரியம் இணைந்து நடத்தும் இளம் ஆராய்ச்சி
யாளர் போட்டி நிகழ்ச்சியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவதற்கு இவரின் நெறிப்படுத்தலே காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment