கிழக்கு மாகாண பாடல் துறை போட்டியில் சிறந்த பாடகர் விருது பெற்றோர் விவரம்!



வி.ரி. சகாதேவராஜா-
கிழக்கு மாகாண கலாசார திணைக்களம் நடத்திய தமிழ் இலக்கிய போட்டியிலே பாடல் துறையிலே வெற்றி பெற்றோர் விவரத்தை மாகாண கலாச்சார பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடகர் விருது பெற்ற விவரம் வெளியிடப்பட்டிருக்கின்றது .

பாடல் துறையிலே வாழ்நாள் சாதனையாளராக அக்கரைப்பற்று வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம்.முபாரிஸ் தெரிவாகி இருக்கின்றார் .

கிழக்கு மாகாண சிரேஸ்ட பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான பாடல்துறை போட்டியிலே முதலாம் இடத்தை மட்டக்களப்பு பிரதி சுகாதார பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் பெற்றுக்கொண்டார்.

இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு கலால் திணைக்களத்தின் கலால் அத்தியட்சகர் செல்வராஜா ரஞ்சன் பெற்றுக்கொள்ள மூன்றாம் இடத்தை மது வரி திணைக்களத்தின் நிருவாக சேவை உத்தியோகத்தர் ஷண்முகம் தங்கராஜா பெற்றார்.

நான்காம் இடத்தை குச்சவெளி பிரதேச செயலக கணக்காளர் சபரிமுத்து அன்ரனி தாஸ் மற்றும் ஐந்தாம் இடத்தை கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் எ.எச். பௌஸ் பெற்றுக் கொண்டார்.
மாகாண அரச உற்றியோதர்களுக்கான பாடல் துறை போட்டியிலே முதலாம் இடத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி நீரஜா செல்வராஜா பெற்றார். இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கந்தசாமி சதாநாதன் பெற்றுக் கொள்ள மூன்றாம் இடத்தை திருகோணமலைபொதுவைத்தியசாலை சாதிய உத்தியோகத்தர் செல்வி நவரூபிகா கனகசிங்கம் பெற்று கொண்டார். நான்காம் இடத்தை மூதூர் பு.ஜெயாகரனும் ஐந்தாம் இடத்தை திருமலை செல்வி சி.கேதாரிணி ஆகியோர் பெற்று கொண்டனர்.

இதேவேளை 2021 ஆம் ஆண்டுக்கான பாடல் துறை போட்டியிலே சிரேஸ்ட பதவி நிலை அரச அதிகாரிகளுக்கான போட்டியில் முதலாம் இடத்தை அக்கரைப்பற்றைச் சேர்ந்த டாக்டர் முபாரிஸ் பெற்றுக் கொண்டார் .
இரண்டாம் இடத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.ஜே.அதிசயராஜ் பெற்றுக்கொள்ள மூன்றாம் இடத்தை பெற்றுக்கொள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த நேச கஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.

இதுதவிர தமிழ் மொழியில் வேறு யாருக்கும் சிறந்த பாடகர் விருது வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :