எருவில் கண்ணகி விளையாட்டு கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகம் சாம்பியன்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ருவில் கண்ணகி விளையாட்டுக் கழகம் நடாத்திய 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில் களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகம் இவ்வருட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு சம்பியன் கிண்ணத்தையும் 15,000 ரூபா பணப்பரிசையும் பெற்றுக்கொண்டது. இக் கழகம் இவ்வருடம் பெற்றுக் கொண்ட 12 சம்பியன் கிண்ணம் இதுவாகும்.

முதலில் துடுப்பாடிய ரொபின் விளையாட்டுக் கழகம் 8 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகம் 7.3 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.

இக்கழகம் முதலாவது போட்டியில் திருவள்ளுவர் விளையாட்டு கழகத்தை 7 விக்கட்டுக்களினாலும் , இரண்டாவது போட்டியில் உதயா விளையாட்டு கழகத்தை 8 விக்கட்டுக்களினாலும் , காலிறுதிப் போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகத்தை 9 விக்கட்டுக்களினாலும் , அரையிறுதி போட்டியில் காமெலியன் விளையாட்டு கழகத்தை 5விக்கட்டுக்களினாலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :