கிழக்கில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு உதவ யுனிசெப் தயார்!



காரைதீவு சகா-
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் UNICEF நிறுவனத்தின் அனுசரணையோடு, பொருளாதார நெருக்கடியினால் கற்றலில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்காக கிழக்கில் உள்ள வலயங்களில் உடனடியாக தரவுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்துடன் யுனிசெப் பிரதிநிதிகள் நடாத்திய பேச்சு வார்த்தையின் பலனாக, குறித்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கப்படவுள்ளது.
இதற்கான தகவல்களை உடனடியாக அனுப்புமாறு கிழக்கு மாகாண கல்வி திணைக்கள கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்வி பணிப்பாளர் பி.நிமலரஞ்சன் சகல வலயக்கல்விப் பணிப்பாளர்களையும் மின்னஞ்சல் ஊடாக அவசரமாகக் கோரியுள்ளார்.

பின்வரும் வகையான மாணவர்களின் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

இடைவிலகிய/நீண்ட கால வரவின்மையை உடைய மாணவர்கள்.
தாய்/ தந்தையை இழந்த பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள். கடுமையான வறுமை கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள்.
மேற்படி மாணவர்களுக்கு விரைவாக கற்றல் உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

ஏலவே ,கிழக்கு மாகாணத்தில் யுனிசெப் ஸ்தாபனம் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட கஷ்ட அதிகஷ்ட பிரதேச வகை 3 தர பாடசாலை மாணவர்களுக்கு வெண்தாள்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :