நிந்தவூரைச் சேர்ந்த அம்ஜாத் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.



வர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது விஞ்ஞானமாணி பட்டத்தையும் (B.Sc), பேராதனை பல்கலைக்கழகத்தில் M.Sc in Organisation Management பட்டத்தையும் பூர்த்தி செய்ததோடு இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவை பரீட்சையில் (SLTES) முன்னிலையில் சித்தி பெற்று தற்போது அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

ஓய்வு பெற்ற பிரதம கணக்காளர் பிர்தெளஸ் ஹஸன் அகமட் மற்றும் மர்ஹூமா சித்தி ஹமீதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வரும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எப்.எச்.ஏ.ஷிப்லி மற்றும் எப்.எச்.ஏ.வகாஸ் ஆகியோரின் சகோதரருமான இவர் தனது ஆரம்பக் கல்வியை நிந்தவூர் அல் மதீனா வித்தியாலயத்திலும் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் நிந்தவூர் அஷ்றக் தேசிய பாடசாலையிலும் கல்வி பயின்றுள்ளார்.

தனது சட்டப்படிப்பை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ள அம்ஜாத் பல சமூக சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தனது உம்மம்மா திருமதி சித்தி றைஹானம், மனைவி தன்சீலா (அபிவிருத்தி உத்தியோகத்தர், காரைதீவு) தனது பிள்ளைகள் ஆகிபா, ஸீனத் மற்றும் அத்னான் ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் இந்த உயரத்தை அடைந்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

தகவல்:A.L. Aazath (Attorney at Law)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :