கல்முனை கல்வி வலய கமு/கமு/ அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற அமர்வு பாடசாலையின் அதிபர் ஏ.எச். அலி அக்பர் தலைமையில், பொறுப்பாசிரியர்களின் வழிநடாத்தலின் கீழ் சிறப்பாக இடம் பெற்றது.
இம்முதற் பாராளுமன்ற அமர்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜிம், கெளரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எ.எச். பெளஸ், ஜிஹானா அலிஃப் ஆகியோரும், விசேட அதிதிகளாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.எம். ஸம்ஸம், ஆசிரியர் ஆலோசகர் பி.ரீ.எம். மஹ்ரூப் ஆகியோரும் மற்றும் பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு பாராளுமன்ற நடைமுறைகளை ஒட்டிய மாணவர் பாராளுமன்ற நடவடிக்கைகள் தெரிவு செய்யப்பட்ட மாணவர் பாராளுன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தங்களது கன்னி உரையில் மிகச் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிக் காட்டியதுடன் அதிதிகளின் பாராட்டையும் பெற்றனர். இங்கு மாணவர் பாராளுமன்ற அமர்வினை பாடசாலையில் பெளதிக வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த பிரதி, உதவி அதிபர்கள் பொறுப்பாசிரியர்கள், மாணவர்களுக்கும் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலையின் அதிபர் ஏ.எச்.அலி அக்பர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment