மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வசித்து வருகின்ற குடும்பங்களுக்கு இலங்கை காப்போம் தொண்டு நிறுவனம் முற்றிலும் இலவசமான குடிநீர் இணைப்பு வசதிகளை வழங்கி வருகின்றது.
அதற்கமைவாக, திருகோணமலை - சாம்பல்தீவு கிராமத்தில் வசித்துவருகின்ற குடும்பங்களில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக குடிநீர் வசதியின்றி மிகவும் கஷ்ட்டப்பட்டு வாழ்ந்து வந்த குடும்பங்களின் நிலைமையினை அறிந்த இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் (திலீப்) உள்ளிட்ட குழுவினர் அக்கிராமத்திற்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு அக்குடும்பங்களுக்கு முற்றிலும் இலவசமாக குடிநீர் வசதி இணைப்பினை இன்று (11) வழங்கி வைத்தனர்.
இக்குடிநீர் வசதி இணைப்பினை ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் தேசமான்ய, தேசகீர்த்தி அப்துல் சமத் முஹம்மட் மஹ்றூப் மற்றும் இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் (திலீப்) ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த இணைப்பினை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் காப்போம் தொண்டு நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
0 comments :
Post a Comment