வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயம் மட்டக்களப்பு மத்தி வலயத்தில் முதலிடம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்தார்.

பரீட்சைக்குத் தோற்றிய 55 மாணவிகளில் எம்.ஆர்.எப். றிஸ்லா, எம்.யூ.எப்.ஹனா, எஸ்.ஏ.எப். உம்றா, ஏ.பி. அஸ்பா ஆகிய நான்கு மாணவிகள் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதுடன், ஆறு மாணவிகள் எட்டு ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

அதேபோன்று பரீட்சைக்கு தோற்றிய ஏனைய மாணவிகளும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

அந்தவகையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரப்படுத்தலின் படி ஆயிஷா வித்தியாலயம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் கடந்த வருட பெறுபேற்றிலும் வலயத்தில் முதலிடம் பெற்றது.

இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவிகளுக்கும், பரீட்சை காலத்தில் பாடசாலையில் சேவை புரிந்த எம்.ரீ.எம்.பரீட் அதிபருக்கும் க.பொ.த சாதாரண தர வகுப்பு இணைப்பாளர் ஆசிரியர் கே.ஆர்.எம்.இர்ஷாத், வகுப்பாசிரியர்களான ஜே.எம்.நியாஸ், எம்.எல்.எம்.முஸம்மில் உட்பட கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :