காரைதீவு சகா-
வித்தகன் விபுலானந்த அடிகள் தொடக்கம் பல பெரியோர்கள் காரைதீவில் கருவிலே திருவுடையவர்களாக இருந்தார்கள். அவ்வாறு இந்த மண்ணில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளும் கருவிலேயே திரு உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உதவியை பிரித்தானியாவில் இருந்து உதவியிருக்கின்றார்ஙள். உதவிநல்கியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் சாமித் தம்பி ராஜேந்திரன் தெரிவித்தார்.
பிரித்தானிய மட்டக்களப்பு நலிந்தோர் அபிவிருத்தி சங்கத்தினரும் மட்டக்களப்பு மருத்துவ மனைகளின் நண்பர்கள் சங்கத்தினரும் இணைந்து நவபோசா போசாக்கு உணவுப்பொதியை வழங்கி வைத்த நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம்(BUDS. UK) மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் சங்கம் (FOBH. UK)என்பவற்றின் நிதிப்பங்களிப்பில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து
குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 'நவபோச' சத்துமா வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்(29.10.2022) சனிக்கிழமை காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இவ் வைபவம் காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி டாக்டர் நடராஜா அருந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை ஆதாரவைத்திய சாலையின் பிரதிவைத்திய அத்தியட்சகர் டாக்டர் சாமித்தம்பி இராஜேந்திரன், காரைதீவு பிரதேச
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர்,காரைதீவின் சமூக சேவையாளர் வி.ரி.சகாதேவராஜா,வைத்திய அதிகாரிகளான டாக்டர் த.உமாசங்கர் டாக்டர் க.ஹரிஷானந்த் , கல்முனை ஆதாரவைத்திய சாலை நிருவாக உத்தியோகத்தர் எஸ்.தேவஅருள் உத்தியோகத்தர் வி.சுந்தர் ஆகியோர் கலந்து நவபோஷா பொதிகளை வழங்கி வைத்தனர்.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரனிடம், காரைதீவின் சமூக சேவையாளர் வி.ரி.சகாதேவராஜா விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இருநூறு "நவபோஸா " பொதிகள் காரைதீவுக்கு வழங்கப்பட்டது.
அதன் பலனாக காரைதீவு பிரதேசத்தில் ஒரு தொகுதி தாய்மார்களுக்கான
சத்துமா பொதிகள் முதல் கட்டமாக வழங்கிவைக்கப்பட்டது.
அங்கு அவர் மேலும் பேசுகையில்.. சமகால பொருளாதாரம் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த திரிபோச சத்துணவு நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த வேளையில் நிலைமையை உணர்ந்து பிரித்தானியாவில் இருக்கக்கூடிய இந்த அமைப்பினர் இந்த நவபோசா சத்துணவை எமது அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன் ஊடாக இந்த மக்களுக்கு வழங்கியமை மிகவும் பாராட்டுக்குரியது. இதற்கு உதவிய பரோபகாரிகளினா குடும்பங்கள் சிரஞ்சீவியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றோம் நன்றி கூறுகின்றோம்.
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் பேசுகையில்..
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த எனது அன்பிற்குரிய ஊடகவியலாளர் சகா சார் அவர்களுக்கு நன்றிகள். இந்த உதவிகள் காலத்தின் கட்டாயமாக தேவையானது.இதற்கு உதவிய அமைப்பினருக்கு நன்றிகள் .பணம் இருந்தாலும் மனம் இருக்க வேண்டும். பிரித்தானியாவில் வாழ்கின்ற இந்த மட்டக்களப்பு அமைப்பினருக்கு நல்ல மனம் இருக்கின்றது. அவர்களை வாழ்த்துகின்றோம்.
இருநூற்று க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும்
நவபோசா சத்துணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை நேற்று முன்தினம் கல்முனை ஆதாரவைத்திய சாலையில் 800 பொதிகள் கல்முனைப் பிராந்திய கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை தெரிந்ததே.
0 comments :
Post a Comment