கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
பொலனநறுவையிலிருந்து வாழைச்சேனைக்கு கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை இன்று (வியாழக்கிழமை) காலை வாழைச்சேனை பொலிசார் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் கே.வி.டி.ஜி.எஸ்.குமாரசிங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான ஐ.ஜி.ஆர்.பிரசாந், ஆர்.எம்.பண்டார, எம்.நிலாந்தன், ஆர்.எம்.எஸ்.டி.ரத்நாயக்க, பி.மஹிரன் அடங்கலான பொலிஸ் குழுவினர் வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே ஜயந்தியாய பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து இரண்டு கிலோ நாநூறு கிராம் (2கிலோ 400 கிராம்) நிறையுடைய இரு கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்ச்சியாக கேரளா கஞ்சாவினை வாழைச்சேனை பிரதேசத்திற்கு வினியோகம் செய்யும் பிரதான வினியோகத்தராகவும் செயற்பட்டு வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் பொலன்னறுவை புதியநகரை சேர்ந்த 42 வயதுடையவர் என்றும் இவருடன் தொடர்புடைய கஞ்சா வியாபாரிகள் தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :