கொழும்பு அல்ஹிதாய பாடசாலையின் சிரேஸ்ட பழைய மாணவா்கள் தமது பாடசாலைக் காலத்தில் கல்வியை புகட்டிய ஆசிரியைர்களை கொழும்புக்கு வரவழைத்து கௌரவிப்பு நிகழ்வொன்றினை வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்திருந்தனா்.
. இந் நிகழ்வில் பட்டயக் கணக்காளா் பெரோஸ் நுான், கவிஞா் லத்தீப், ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளா் அஷ்ரப், ஓய்வுபேற்ற மேல்மாகாண ஆசிரியர் ஆலோசகா் எம்.ஜ. ஹமீட் ஆகியோா்கள் தமது ஆசிரியைகளையும் அவா்கள் தமக்கு கல்வி புகட்டிய சம்பவங்களை பகிா்ந்து அவா்களை பூரிப்படையச் செய்தாா்கள். அத்துடன் அன்று எங்களுக்கு சொந்த பிள்ளை போன்று எங்களுக்கு பாடசாலைக் கல்வி புகட்டியதானாலேயே நாங்கள் எங்களது வாழ்க்கைத்தரம் மற்றும் கல்வியினாலும் சிறந்த மனிதனாக நாங்கள் நிலைத்து நிற்கின்றோம். அத்துடன் எங்களது குடும்பமும் நல்ல நிலையில் நிலைத்திருக்கின்றோம். அதற்கு அத்திவாரமிட்ட ஆசிரிய பெருந்தகைகளை நாங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது அழைத்து பாராட்டாமல் இருக்க முடியாது என பழைய மாணவா்கள் உரையாற்றினாா்கள்.
ஆகவே தான் எங்களது பாடசாலையான மருதானையில் உள்ள அல் ஹிதாயா கல்லுாாியில் 40 வருடங்களுக்கு முன் கற்பித்து ஓய்வுபெற்று நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஆசிரியைகளை கௌரவித்தாா்கள். இந் நிலையின் தாம் கற்பித்த மாணவா்கள் இன்று நல்ல நிலையில் உள்ளதை நினைத்து நாங்கள் உளம் பூரிப்படைவதாக ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் தெரிவித்தாா்.
0 comments :
Post a Comment