சம்மாந்துறை சந்தக்கவி அச்சிமுகம்மட்டிற்கு கரிகால் சோழன் விருது !



வி.ரி. சகாதேவராஜா-
சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை மற்றும் தஞ்சைத் தமிழ்பல்கலைக்கழகம்
இணைந்து வழங்கும் கரிகால் சோழன் விருதுக்கு இம்முறை இலங்கையில் இருந்து சம்மாந்துறை சந்தக்கவி அச்சி முகம்மட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மலேசியா ,சிங்கப்பூர் ,இலங்கை எழுத்தாளர்களின் மிகச்சிறந்த நூல்களை ஆராய்ந்து ஆண்டுதோறும் கரிகால் சோழன் விருது வழங்கி வருகிறது.

அந்த விழாவுக்கு இலங்கையில் இருந்து சம்மாந்துறை சந்தக்கவி அச்சி முகம்மட்டினால் அனுப்பப்பட்ட 'எனது நிலமும் நிலவும் ' எனும் மரபுக் கவிதைத் தொகுதி கரிகால் சோழன் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நூலாசிரியரான மரபுக் கவிஞர் சம்மாந்துறை சந்தக்கவி அச்சி முகம்மட் அவர்களை தஞ்சாவூர் பல்கலைக்கழகம் கௌரவமாக அழைத்திருக்கிறது.

விழா நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில்
மாலை 5.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :