கல்வி அமைச்சின் ஜெம் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் கணித முகாம் நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது.
உள்ளக நிகழ்வுகள், வெளியக நிகழ்வுகள், மேடை நிகழ்வுகள் என மூன்று கட்டங்களாக நடைபெற்ற இம் முகாமில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளரும், உதவிக்கல்வி பணிப்பாளருமான என்.எம்.ஏ. மலீக் கலந்து கொண்டதுடன் மேலும் கணித பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ். சஞ்சீவன், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. இலங்கநாதன் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.எச்.எம்.அபூபக்கர், ஏ.எச்.எம். அமீன், கணிதபாட இணைப்பாளர் ஏ.எச்.எம். றிஸான், கல்லூரியின் கணிதபாட ஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment