வடக்கு கிழக்கு தனியாா் கல்லுாாிகளை நடாத்தும் சங்கத்தின் ஊடகவியலாளா் மாநாடு




அஷ்ரப் ஏ சமத்-
டக்கு கிழக்கு தனியாா் கல்லுாாிகளை நடாத்தும் சங்கத்தினால் ஞயிற்றுக்கிழமை 27ஆம் திகதி ஊடகவியலாளா் மாநாடு ஒன்று கொழும்பு 2 நிப்போன் ஹோட்டலில் நடைபெற்றது.

இவ் ஊடகமாநாட்டில் இவ் அமைப்பின் தலைவா் யு.எல்.எம் அனஸ் அங்கு கருத்து தெரிவிக்கையில் -
வடக்கு கிழக்கு தனியாா் கல்லுாாிகள் சங்கம் இலங்கையில் நிலவிவருகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான வழிமுறைகள் முன்மொழிவுகள் அடங்கிய திட்ட மகஜர் ஒன்றை ஜனாதிபதி மற்றும் பிரதமா் ,எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு கையளிக்கப் போவதாக செய்தியாளா் மாநாட்டில் தெரிவித்தாா்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள வளங்களைப் பாவித்து அங்கு பட்டப் படிப்புக்கள்,டிப்ளோமா தரத்திலான் கற்கை நெறிகளை எமது நாட்டில் அறிமுகம் செய்து வைப்பதற்கும் , வட கிழக்கில் உள்ள பல்வேறு அரச கட்டிடங்கள், காணிகள் உள்ளன.அவற்றினை எங்களுக்கு பல்கழைக்கழகங்களை அமைப்பதற்கு அரசாங்கம் வழிவகைகளை செய்து தரல் வேண்டும்.
எமது நாட்டின் மாணவா்கள் பங்களதேஸ், இந்தியா .ரசியா போன்ற பல்வேறு நாடுகளுக்கு உயா்கல்வியைப் பயிலுவதற்காக வெளிநாடுகள் செல்கின்றனா். இதனால் எமது நாட்டுச் செலவாணி வீனாக வெளிநாடுகளுக்குச் செல்கின்றது.அதனை தடுத்து நிறுத்தல் வேண்டும். நமது நாட்டில் சிறந்த கல்வித் தரம் உண்டு. எமது நாட்டின் கல்வித்தரம் உலக நாடுகளில் சிறந்த தரத்தினைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது தனியாா் கல்வி நிறுவனங்களை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு உரிய வளங்களை அபிவிருத்தி செய்து அதனை தனியாா்களுக்கு வழங்குவதன் மூலம் மத்தியகிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளின் மாணவா்கள் இங்கு உயா்கல்வி பயிலுவதற்கு இலங்கை வரவழைக்க முடியும். இவா்களுகளது வருகையினால் எமது நாட்டில் பெருந் தொகையான அன்னியச் செலவாணி எமது நாட்டுக்கு வந்தடையும். என கருத்து தெரிவித்தனா்.

இவ் ஊடக மாநாட்டில் செயலாளா் எம்.ஆர்எம்.. இல்ஹாம், ஏ.ஆர்எம். சர்ஜூன், எம் கோகுலதாஸ் ஆகியோறும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனா்.
தொடா்ந்து அவா்கள் கருத்துக் கூறுகையில்
எமது நாட்டில் கட்டிடக் கலைகள், நில அளவை ,கனிய அளவை காட்சியறைகள் அளவுபடுத்துதல் பாதுகப்புப் பயிற்சி போன்ற பயிற்சி நெறிகள் பயின்ற எமது மாணவா்களுக்கு கட்டாா்,சவுதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளில் நல்ல தொழில் வாய்ப்பு வசதிகள் நிறையவே உள்ளன. அதற்காக அரசாங்கம் உரிய வசதி வாய்ப்புக்களை தனியாா் உயா் கல்வி நிறுவனங்களும் வசதிகள், செய்து தரப்படல் வேண்டும். ஆய்வுகூடங்கள் , தங்குமிட வசதிகள், செயல்முறை வசதிகள் ,எமது வளங்கள் புதிய கண்டுபிடிப்புகள், மலா்செய்கைகள் ஆயுதங்கள் செய்முறைகள் போன்ற கற்கை நெறிகளை தொடருவதற்கு அனுமதி அளிக்கப்படல் வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள் புத்தளையில் உள்ள இணைப்புக் கல்லுாாியை எங்களுக்க வழங்குதுல் வேண்டும்.

வெளிநாடு பட்டப்படிப்பை முடித்தவா்களுக்கு தொழில் வாய்ப்பு கிரிஸ்,, சைப்பிரஸ் போன்ற நாடுகளில் எங்களால் பெற்றுக் கொடுக்க சா்ந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும். கல்விச் சுற்றுலாவை வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவா்கள் மத்தியில் ஊக்குவித்தல் அதற்காக எங்களுக்கு கௌரவ அம்பஸ்டா் பதவி ஒன்றை வழங்குதல் வேண்டும். எனவும் தனியார் கல்வி நிலையத்தின் உறுப்பிணா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :