புகையிரத வண்டியில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (11) சென்ற புகையிரதர வண்டியில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளான்.
இந்தச் சம்பவம் சித்தாண்டி - முறக்கொட்டான்சேனை தேவபுரம் எனும் இடத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி - 1, அலைமகள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்துள்ள இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment