பௌர்ணமியில் வருகின்ற சந்திர கிரகணம் நாளைய தினம் (8) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணி தொடக்கம் மாலை 6:30 மணிவரை இடம் பெற இருக்கின்றது. இது பௌர்ணமி திதியில் வருகின்ற காரணத்தினால் மிகவும் சக்தி மிக்கதாக இருக்கும் என்று வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோவர்தன சர்மா தெரிவித்தார்.
இன்று(7) பௌர்ணமி தின பூஜை ஆலய தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது. ஆலய பரிபாலன சபை ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா திருமந்திரம் அளித்த திருமூலர் பற்றி விளக்கமளித்தார்.
பூஜையின் இறுதியில் பிரதம குரு கோவர்த்தன சார்மா மேலும் உரையாற்றுகையில்...
ஐப்பசி மாதத்திற்குரிய பூரணையானது இன்றுதிங்கட்கிழமை பிற்பகல் நான்கு முப்பது மணி தொடக்கம் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி வரை ஆகும் .
ஆங்கில காலண்டரில் இன்றைய தினம் பூரணை என்று விடுமுறை என்று இருக்கின்றது .தமிழை பொறுத்தவரையிலே இன்று மாலை 4:30 மணி தொடக்கம் நாளை 5:30 மணி வரைக்கும் பூரணை காலம் .எனவே அந்தப் பூரணை திதிக்குள் வருகின்ற இந்த சந்திர கிரகணம் சக்தி மிக்கதாகும் மாலை 6:30 மணியளவில் இந்துக்கள் ஸ்ஞானம் செய்து புதிய உணவை உண்ணுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நாளைய தினமும்(8) இங்கே பூஜைகள் இடம் பெறும்

0 comments :
Post a Comment