ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.நசுருதீன் தெரிவித்தார்.
கிண்ணியாவில் உள்ள திருகோணமலை மீடியா போரத்தின் ஊடக இல்லத்தில் இன்று (05) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் முன்னால் ஆட்சியாளர்களை பதவி விலக கோரிய ஜனநாயக போராட்டத்தில் பங்கு கொண்டவர்களை அப்பட்டமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது பெரும் விரோதமான செயலாகும் .அனைத்து பல்கலைக்கழக மாணவ தலைவர் வசந்த முதலிகே ,தேரர் உட்பட பலரின் கைதை ஏற்க முடியாது இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஜனநாயக குரலை நசுக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என்றார்.
0 comments :
Post a Comment