இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று ஞயிற்றுக்கிழமை அக்டோபர் (31) உலக வங்கிக் காரியலயத்தில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது சுற்றுலாத் துறைறை கட்டியெழுப்பும் முகமாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டது.
இச் சந்திப்பின்போது உலக வங்கியின் உலக முதலீட்டுத் திட்டமிடல் மற்றும் ஊக்குவிப்புக்கான உலக வங்கி பிரதிநிதி ஐவன் எண்டன் நிமேக், உலக வங்கியின் தனியார் துறை விசேட ஆலோசகர் திருமதி. பிரியங்கா கெஹர் மற்றும் உலக வங்கியின் பொருளாதார நிபுணர் அமிலா ஈஸ்வரி தயாநாயக்க, சுற்றுலா சம்மேளனத்தின தலைவர் ஏ.எம். ஜௌபர், விசேட ஆலோசகர் திஸ்ஸ ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈஸ்டர் தாக்குதல், கோவிட் 19 பாதிப்பு மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் இலங்கைக்கு அண்நியச் செலவாணியை ஈட்டித் தரும் சுற்றுலாத் துறை மிகுந்த வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இத்துறையின் 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தனது வாழ்வாதாரமாக இத்துறையை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள். மேற்படி பாதிப்பினால் இத்துறைசார்ந்தவர்களது வாழ்வதாரம் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதை சுற்றிகாட்டியுள்ளதுடன், பல்வேறு யோசனைகளையும் உலக வங்கி பிரநிதிகளிடம் முன்வைத்துள்ளனர்.
சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சகலருக்கும் நிதி நிவாரணம் வழங்குமாறும் உலக வங்கியிடம் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான ஊழியர்க்கான ஓய்வூதியம் நிதியை வழங்குதல் வேண்டும். அத்துடன் இலங்கையில் உள்ள சலக பல் கலைகழகங்களுக்கும் சுற்றுலாத்துறை பட்டப்படிப்பு பாடநெறிகள் நடத்துவதற்கான நிதியுதவியை வழங்குதல். சுற்றுலா பிரதேசங்களில் பொது மலசலகூடம், தகவல் மத்திய நிலையங்கள் போன்றவற்றை அமைப்பதற்கு நிதியுதவியை வழங்குதல்.முச்சக்கரவண்டிச் சாரதிகள், வாகன சாரதிகள், ஜீப் சபாரி சாரதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களை இனங்காணும் முகமாக விசேட சீருடை வழங்கப்படல் வேண்டும்.
மேலும் சுற்றுலா வலயங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சுற்றுலா துறை சம்பந்தமான கல்வி அறிவு அறிமுகப்படுத்துதல். போதை வஸ்து பாவனை கலாச்சாரப் பாதிப்புகள் சம்பந்தமான விழிப்பூட்டல் நிகழ்ச்சிகள் நடத்தப்படல் வேண்டும். சுற்றுலாத்துறையில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் சகவ சுற்றுலாத்துறை வியாபாரத்துறையை பதிவு செய்து தரப்படுத்தி கட்டுபாட்டு முறையையையும் கனனிமயப்படுத்தல் முறையை அமுல் படுத்துவதற்கான உதவிகள் வழங்கப் படல்வேண்டும்.
பண்டைய கால கலாச்சாரங்கள் சுற்றுலா, மருத்துவமுறைகள் சுற்றுலா, விளையாட்டுத்துறை சுற்றுலா, இயற்கை வளங்கள் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவிகள் வழங்கப்படல் வேண்டும். இலங்கையில் உள்ள ஆறு துறைமுகங்கள் உள்ளதையும் சுட்டிக்காட்டி சுற்றுலா பிரயாணிகளுக்கான கப்பல் துறைகளில் முதலீடு செய்வதற்கும் உலக வங்கி உதவி புரிய வேண்டும். அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் முதலீட்டாளர்களுக்கு தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு விசேட சலுகைகளை வழங்கப்படல் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்ட்டது.
இலங்கையில் சுமார் 25 மாவட்டங்களிலும் வர்த்தகத் கைத்தொழில் சம்மேளனமும் ஒன்பது தேசிய ரீதியான வர்த்தக சம்மேளனமும் தங்களது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய நிர்வாகச் சிக்கல்களை எதிர் நோக்குவதனால் 3 வருடத்துக்கொரு முறை இத்துறை சார்ந்தவர்களை ஒன்றுபடுத்தி மாநாடுகள், பயிற்சிக் கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிதி உதவிகளை இந் நிறுவனங்களுக்கும் வழங்குமாறும் சுற்றுலா வர்த்தக சம்மேளத்தினால் உலக வங்கி பிரநிதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
0 comments :
Post a Comment