சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு-01ம் பிரிவை சேர்ந்த மீரா மொஹிதீன் தாஹீர் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டு கல்முனை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி ஏ. எம்.முஹம்மட் றியாழ் முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
வன பரிபாலனத் திணைக்கள வன வெளிக்கள ௨த்தியோகத்தராக கடமையாற்றும் இவர் தனது ஆரம்ப கல்வியையே சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்திலும் ௨யர்தரத்தை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் (தேசிய பாடசாலை) பயின்றுள்ளார்.
மர்ஹும் எஸ்.எல். மீராமுகைதீன் மற்றும் என். சல்ஹா ௨ம்மா ஆகியோரின் மூத்த மகனான இவர் சம்மாந்துறை சமுகநல மேம்பாட்டு ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், தற்போதய பிரதித் தலைவருமாவார். இன்னும் பல சமுகப்பணிகளிலும் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment