உலகிற்கு முதல் சைவசித்தாந்த நூலை தந்தவரும் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை அளித்த மூத்த சித்தரான திருமூலர் பெருமானின் குருபூஜையை முன்னிட்டு நடைபெறும் சண்டி ஹோமம் இந்த வருடம் இன்று (6) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜியின் தலைமையில் மட்டக்களப்பு அமிர்தகழியில் இன்று(6) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் சண்டி ஹோமம் தொடர்ந்து நாளையும் நாளை மறுதினமும் நடைபெற உள்ளது.
இலங்கையின் இலங்கை பிரபல வேத வாத்தியார் சிவ ஸ்ரீ வத்சாங்க குருக்களின் தலைமையிலான வேத வாத்தியார்கள் சண்டி ஹோமதை நடத்தி வைக்கின்றார்கள். அனைவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்திருக்கின்றார்கள். ஹோமத்துக்கான திரவியங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கின்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை
*அதிகாலை 3 மணிக்கு அனைத்து காரிய தடைகளையும் நீக்கும் வஞ்சா கல்ப கணபதி ஹோமம்* நடைபெறும். தொடர்ந்து
*அதிகாலை 5 மணிக்கு அனைத்து தோஷங்களை நீக்கும் நவகிரக ஹோமமும்
*காலை 6 மணிக்கு அனைத்து செல்வங்களையும் தரும் குபேர லட்சுமி ஹோமமும்
காலை 8 மணிக்கு பூர்ணாகுதி இடம் பெறும்.
பின்னர் *மாலை 5 மணிக்கு மரகத லிங்கத்தை சுற்றி அனைவரும் அமர்ந்து அபூர்வ தெய்வீக அதிர்வலைகளை உலக நன்மைக்காக எழுப்பும் ருத்ர பாராயணம், பஞ்சாட்சர ஜெபம்* இடம் பெறும்.
நாளை (7) திங்கட்கிழமை
*அதிகாலை 3 மணிக்கு அனைத்து கர்ம வினைகளையும் கழைந்து சிவபதமளிக்கும் ஏகாதச ருத்ர ஹோமம்* தொடர்ந்து
*காலை 8மணிக்கு பூர்ணாகுதி*இடம் பெறும்.
மாலை 5 மணிக்கு நமக்குள் இருக்கும் அபூர்வ ஆற்றலான குண்டலினி சக்தியை விழிக்க செய்து அனைத்து வித சித்திகளையும், ஆற்றல்களையும் கொடுக்கும் ஸ்ரீ சக்ர பூஜை, ஆதார சக்ர பூஜை, தேவி மகாத்மிய பாராயணம் இடம் பெறும்.
நாளை மறுநாள் (8) செவ்வாய்க்கிழமை *அபூர்வமான ஐப்பசி பௌர்ணமி திதியில், அதிகாலை 3 மணிக்கு மாபெரும் சண்டி ஹோமம் ஆரம்பமாகுமா.
*தொடர்ந்து இந்த பிரபஞ்சத்தில் ஆதாரமாக இருக்கும் 13 சக்திகளுக்கும் யாகத்தில் சிறப்பு பூஜைகள், 64 உபசாரங்கள் இடம் பெற்று
காலை 9 மணிக்கு பூர்ணாகுதி இடம் பெறும்.

0 comments :
Post a Comment