சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவி ஸகீய்யா பானு தேசிய மட்டத்தில் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
கில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 12 ஆண்டில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவி ஏ.எப் ஸகீய்யா பானு தேசிய மட்ட போட்டியில் ஐந்தாம் பிரிவில் உள்ள இலக்கிய விமர்சன போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.

இவர் உதுமாலெப்பை அஸ்றப் ,அலியார் ஜுமானா தம்பதியின் மூத்த புதல்வியாவார்.இம் மாணவி தேசியமட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதையிட்டு பாடசாலை அதிபர் திருமதி யு.என்.ஏ ரஹீம் தலைமையில் பாரட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (08) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் பயிற்சி மற்றும் நெறிப்படுத்தல்களை "சந்தக்கவி எம்.ஐ. அச்சி முஹம்மட் ஆசிரியர் அவர்களும், பாடசாலையின் தமிழ்த்துறை இணைப்பாளரும், தமிழ் மொழித் தின பொறுப்பாசிரியருமாகிய "குரு பிரதீபாபிரபா" ,ஆசிரியர் ஏ.பி.முஹம்மத் அவர்களும் மேற்கொண்டிருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :