முன்னாள் பிரதியமைச்சா் பீ.பீ. தேவராஜ் அவா்கள் எழுதிய ”இலங்கை மலையகத் தமிழா் வரலாற்றின் சில துளிகள்” நுால் வெளியீட்டு வைபவம் சனிக்கிழமை 13ஆம் திகதி கொழும்பு 7 ல் உள்ள இந்திய கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்திய உயாஸ்தாணிகா் கோபால் பாக்லே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். இந் நுாலின் முதற்பிரதியையுஉயா்ஸ்தாணிகா் நுால் ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.
இவ் வைபவத்தில் கொழும்பில் வாழும் மலையக வர்த்தக சமூகத்தினா், மலையக புத்திஜீவிகள் மற்றும் பீ.பீ.தேவராஜின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 100 பேர் மட்டுமே கலந்து கொண்டனா்.
இங்கு உரையாற்றிய இந்திய உயா்ஸ்தாணிகா் - இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சத்தினா்கள் வாழ்வதாரம், கல்வி, வீடமைப்புகள் அவா்களது மேம்பாட்டுக்கு உதவுவது இந்தியாவின் கடமையாகும். முதல் முறையாக இந்தியாவின் பிரதமா் மோடி அவா்கள் 2017ல் இலங்கை வந்தபொழுது மலையகம் சென்றிருந்தமை ஒர் வரலாற்று நிகழ்வாகும். இலங்கையில் மலையகத்தில் வாழும் மாணவா்களது கல்வி வளா்ச்சியில் க.பொ.த. உயார் தரத்தில் சித்தியடைந்து இலங்கையில் உள்ள ஜந்து பல்கலைக்கழகத்தில் வருடாந்தம் 700 பேர் பட்டதாரிகளாக நுழைவதென்பது ஒர் சிறந்த கல்வி முன்னேற்ற வளா்ச்சியாகும். மலையக வாழ் மாணவா்களது. கல்வி மேம்பாட்டுக்காக மலையக மக்கள் வாழும் மலையகப் பிரதேசங்களில் உள்ள பிள்ளைகளின் எதிா்காலத்தில் சிறந்த முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்கு . ஆரம்பக் கல்வி, சாதாரண தரம், உயா்தரம் மற்றும் உயா்கல்விக்கு இந்திய அரசாங்கம் எமது உயா்ஸ்தாணிகர் ஊடக உதவும். நமது பொருளாதார வளா்ச்சிக்கு நாம் கல்வியிலேயே மட்டுமே முன்னேறுவது சிறந்ததாகும். கண்டியில் உள்ள இந்தியத் துாதரகம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்களாகும். அத்துடன் 200 வருடங்கள் முன்பு இந்தியத் தமிழா்களை இலங்கையின் தேவைக்காகவே அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும் எனவும் இந்திய உயா்ஸ்தாணிகா் அங்கு தெரிவித்தாா்.
பி.பி. தேவராஜ் இங்கு கருத்து தெரிவிக்கையில்
இந்த நுாலை எழுதியதன் முக்கிய நோக்கம் தற்போதைய எதிா்கால சந்ததிகள் இலங்கை மலையகத் தமிழா்களின் வரலாறுகளை, அறிந்து கொள்ள வேண்டும். இந் நுாலில் மலையக மக்கள் பற்றி பல்வேறு தலைப்புக்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. பெருந்தோட்ட உருவாக்கமும் நெருக்கடிகள், இலங்கைத் மலையகத் தமிழா் உள்ள பிரதேசங்கள், மாவட்ட ரீதியாக இந்திய வம்சாவலித் தமிழா்கள் விகிதாசாரங்கள், மலையகத் தமிழா்களது அடையாளச் சின்னங்கள், பரிமாணங்கள், ஆலயங்கள், தமிழ் நெறிக் கல்வி, மனித இடம்பெயா்வு ஒரு வரலாற்று பின்னனி. ஜரோப்பியா் காலத்தில் இந்தியா் இலங்கை வருகை, இறப்பா் தேயிலை பயிற்செய்கை ஜரோப்பியா் காலம், இந்தியா சுதந்திரமடைந்து மகாத்மாக் காந்தியின் செயற்பாடுகள், டொனமூர் முதல் சோல்பரி அரசியல் சட்டங்கள் வரை, மலையக மக்கள் 24 மாவட்டங்களில் வாழும் மலையக முஸ்லிம் மக்கள், மலையக அரசியல் பிரநிதிகள் போன்ற பல்வேறு தலைப்புக்களில் இலங்கை மலையகத் தமிழா் வரலாறுகள் எழுதப்பட்டுள்ளதாகவும் பீ.பீ. தேவராஜ் அங்கு தெரிவித்தாா். அத்துடன் அங்கு வகை தந்திருந்த வர்த்தகச் சமூகங்கள் ஒர் நுாலின் விலை 2000. ருபா சகல நுால்களை வாங்கிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment