மத்திய சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற நோயாளர் காவு வண்டி கையளித்து வைக்கும் நிகழ்வு நேற்று (09) திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் வி.பிரமானந் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் கலந்துகொண்டு நோயாளர் காவு வண்டியை மூதூர் தள வைத்தியசாலைக்கு வழங்கி வைத்தார். குறித்த வண்டியை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் வி.கயல்விழி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜீ.எம்.கொஸ்த்தா உள்ளிட்ட வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மூதூர் தள வைத்தியசாலைக்கு மிக அத்தியவசியத் தேவையாக இருந்துவந்த நோயாளர் காவு வண்டி தொடர்பில், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரனை கடந்த மாதம் திருகோணமலை சுகாதார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியதையடுத்து, இன்று நோயாளர் காவு வண்டி வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment