ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் கிண்ணியா அமைப்பினரின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிவில் சமூக அமைப்புகளின் திறன் விருத்தியை மேம்படுத்தும் செயலமர்வொன்று கிண்ணியா விஷன் மண்டபத்தில் இன்று (08) நடைபெற்றது.
PADD எனும் இப்புதிய செயற்திட்டம் சமூகத்தின் ஒன்றிணைக்கப்பட்ட செயற்பாடுகளை வலுவூட்டுவதற்கான மக்களின் ஈடுபாட்டை மேம்படுத்தல்
PEOPLE’S ACTION FOR DEMOCRACY AND DEVELOPMENT (PADD) எனும் தலைப்பில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 20 சிவில் சமூக அமைப்புகளை ஜனநாயக மற்றும் அபிவிருத்தி துறையில் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேற்படி நிகழ்ச்சியில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பிரதேச செயலகங்களிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 20 சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது சிவில் சமூக நிறுவனங்களின் திறன் விருத்தியை அதிகரிக்கும் நோக்கில் திருகோணமலை சிவில் மன்றம் (Trinco Civic Forum) என்ற அமைப்பொன்று உருவாக்கப்பட்டது.
இந்நிகழ்வின் வளவாளராக சுஜீவன் சித்ரவேல் மற்றும் அவரோடு கடமையாற்றும் மதியழகன், நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷிக் அலாப்தீன், கணக்கு உதவியாளர் நிஷாத் சுபைர் மற்றும் ஊடக அதிகாரி ஆதில் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment