பெருமிதத்துடன், உள்நாட்டிலேயே வளர்ந்த இலங்கை வர்த்தக நாமமான காகில்ஸ் புட்சிட்டி, எதிர்வரும் 04/11/2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று விற்பனையகத்தை மூதூர் நகரில் திறப்பதன் மூலம், மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. அதன் துணிச்சலான மற்றும் சுறுசுறுப்பான 39 வருடகால பயணத்தில், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் சில்லறை வணிகச் சங்கிலியானது உள்நாட்டு சுற்றுப்புறங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் மேம்படுத்தல்கள், அதன் விற்பனையகங்களைச் சுற்றி விரிவடைந்து வளர்ச்சி அடைதலுடன் ஒரே நேரத்தில் நாட்டில் சில்லறை பல்பொருள் அங்காடி வணிகத்தின் ( supermarket business)பரிணாமத்தை பட்டியலிட்டுள்ளது.
சர்வதேச பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக தன்னைத் தரப்படுத்துவதன் மூலம், காகில்ஸ் புட்சிட்டி தனது அடிச்சுவடுகளைப் பின்பற்றிய ஏனையவர்களுக்கு உயர் மட்டங்களை அமைக்க வழிவகுத்த அதே நேரத்தில், அதன் வெற்றி இத்துறையில் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க உதவியது. காகில்ஸ் புட்சிட்டியானது இலங்கையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வெற்றி பெற்ற ஒரு வர்த்தக நாமமாகத் திகழ்வதுடன், பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு சமூகத்தின் மீது நீண்டகால மற்றும் நிலையான பயன்மிகு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொற்றுநோய்கள் பரவிய காலங்களிலும் ஒரு உண்மையான வியாபார நாமமாக செயற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment