ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்த தம்பதிக்கு நிதி உதவி




நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
ரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்த மஸ்கெலியா புரன்வீன் ராணிதோட்டதை சேர்ந்த 31 வயதான கிருஷ்ணகுமார் பாக்கியலட்சுமி, என்ற இளம் தம்பதியினரின் குடும்ப நிலைமையை கருத்திற் கொண்டுஅவர்களுக்கு உதவித் தொகையான முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான ‘சமூக ஜோதி’ வாமதேவன் தியாகேந்திரனினால் முதற் கட்டமாக இவ்வாறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அன்றாடம் தோட்ட வேலைகளில் ஈடுபட்டு தமது ஜீபனோபாயத்தினை நடத்தி வந்த நிலையில் இவ்வாறு மூன்று பெண் குழந்தைகளை இம் மாதம் 01 ஆம் திகதி நுவரலிய மாவட்ட வைத்தியசாலையில் இவர் பிரசவித்துள்ளதுள்ளார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தோட்ட வேலைகளில் ஈடுபட்டு தமது வாழ்க்கையை நடத்தி வரும் இக்குடும்பத்தின் நிலைமை குறித்து ஊடகங்களின் வாயிலாக அறிந்து கொண்டதன் பின்னரே இவ்வாறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளருமான எம்.ரீ.எம். பாரிஸ்; மூலம் குறித்த தம்பதியினரின் இல்லத்தில் வைத்து இன்று ஒப்படைக்கப்பட்டது.

தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் சமூக ஜோதி வாமதேவன் தியாகேந்திரன் நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை தனது சொந்த நிதியின் மூலம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :