இஸ்லாம் பாடபுத்த விவகாரத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மீண்டும் புத்தகங்களை மாணவர்களுக்கு மீள்விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுத்த நீதிக்கான மய்ய நிர்வாகிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் தலைவர் ஊடகவியலாளர்
கலாநிதி றியாத் ஏ.மஜிட் தலைமையில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலத்தில் இன்று இடம்பெற்றது
சிலோன் மீடியா போரத்தின் பொதுக்கூட்டத்தை தொடர்ந்து பொருளாளர் யூ.எல். நூருல் ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் பிரதம அதிதியாகவும் கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியால அதிபர் யூ.எல்.நஸார் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர். ஏற்பாட்டாளர்கள் மற்றும் அதிகளினால் நீதிக்கான மய்யத்தின் செயற்பாடுகள் வெகுவாக பாராட்டப்பட்டதுடன் நீதிக்கான மய்ய நிர்வாகிகளான தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச் இஸ்மாயில், பிரதித்தலைவர் யூ.கே. றிம்ஸான், பொருளாளர் ஏ.ஏ. அஸ்ரப் அலி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம்.முஜாஹித், பிரதித்தலைவர் எஸ்.அஸ்ரப்கான், சிலோன் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment