காரைதீவு பிரதேசத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் செயற்திட்டத்தை காரைதீவு பிரதேச சபை முன்னெடுத்து வருகின்றது.
இது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல்
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இக் ௬ட்டமானது UNDP நிறுவனத்தின் அனுசரணையில் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள்,பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்,காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர், செயலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக் ௬ட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக எதிர்காலத்தில் இவர்களிற்கான வாழ்வாதார உதவிகள், சுய தொழில் செய்வதற்கான உதவிகள் மற்றும் அவர்களின் இன்ப துன்ப நிகழ்வுகளிற்கும் உதவி வழங்குவதாகவும் அவர்களிற்கு தேவையான ஊன்றுகோல், wheel chair என்பனவற்றினை முன்னய காலங்களில் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.
இனிவரும் காலங்களிலும் UNDP மற்றும் ஏனைய நிறுவனங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொள்வதாகவும் தவிசாளர் உறுதியளித்தார் .
இதனை UNDP அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் காரைதீவு பிரதேச சபையின் இச் செயற்பாடுகளை பாராட்டினார்கள்
0 comments :
Post a Comment