அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரித்திர பூர்வ வெற்றியை பெற்றது.
ஐந்தாம் பிரிவு இலக்கிய விமர்சனப் போட்டியில் செல்வி ஏ.எப். சக்கியா பானு
மூன்றாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் ,வலயத்துக்கும்
கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஆலோசனை வழங்கிய பாடசாலை முதல்வர் ஜனாபா யு.என்.ஏ. நஜீபா றஹீம்
நெறிப்படுத்தலுக்கு ஆலோசனை வழங்கிய சம்மாந்துறை வலய தமிழ் பாட
உதவிக் கல்வி பணிப்பாளர் ஏ.எல். முகம்மட் றஸீன், ஆசிரிய ஆலோசகர் இசட்.எம். மன்சூர் இம்மாணவியை வழிப்படுத்திய ஆசிரியர் சந்தக்கவி
மு.இ.அச்சிமுகம்மட், தமிழ் மொழி பாட இணைப்பாளர் ஏ .பி . முஹம்மட்
ஆகியோருக்குப் பாடசாலை சமூகம் நன்றியை தெரிவித்துக் கொண்டது.
வெற்றி பெற்றுப் பெருமை சேர்த்த மாணவிக்கு சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எஸ் எம் எம் அமீர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்..
0 comments :
Post a Comment