தகவல் அறியும் சட்டம் தொடர்பில் கொழும்பில் கருத்தரங்கு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
"தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?" என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பு மருதானையில் உள்ள (AMYS) அஷ்- ஷபாப் தலைமையில் நடைபெறும்.

AMYS அமைப்பின் அனுசரணையில் இடம் பெறும் இக்கருத்தரங்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 25 மாவட்ட இணைப்பாளர்களும் கலந்து கொள்வர்.

விடிவெள்ளிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட செயற்குழு உறுப்பினருமான எம்.பி.எம். பைரூஸ் நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொள்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில், அஷ்-ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிமும் கலந்து சிறப்பிக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டிருக்கின்ற மாவட்ட பணிப்பாளர்களுடைய கூட்டமும் மற்றும் செயற்குழு கூட்டமும் இதனை அடுத்து நடைபெறும் என அமைப்பின் பிரதிச் செயலாளர் சாதிக் சிஹான் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :