கல்முனை றோட்டரிக் கழகத்தால் கடந்த வருடம் காரைதீவில் உயர்தரத்தில் சாதனை படைத்த ஆறு மாணவர்கள் பொன்னாடை போர்த்தி ,பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கல்முனை றோட்டரிக் கழகத்தின் 22 வது தலைவராக றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன் பதவி பிரமாணம் செய்த நிகழ்விலேயே இக்கௌரவிப்பு விழா நடைபெற்றது.
புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினது பதவியேற்பு வைபவம் காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றது.
பிரதம அதிதியான மாவட்ட ஆளுநர் றோட்டரி மாவட்ட ஆளுநர் றோட்டரியன் புவுது டி சொய்சா, மற்றும் கௌரவ அதிதியான காரைதீவுப்பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், தலைவர் றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்ஆகியோர் இக் கௌரவத்தை வழங்கினார்கள்.
இதன்போது, இவ் வருடம் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
உயிரியல் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்ற காரைதீவைச் சேர்ந்த மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் முதலில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மாணவிகளான சகாதேவராஜா டிவானுஜா,லோகநாதன் புவித்ரா, தங்கவடிவேல் டயானு, ராஜேஸ்வரன் கம்ஷாயினி ஆகியோர் மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்..
தொடர்ந்து ரஜிநாதன் துர்க்கா பொறியியல் துறைக்கு தெரிவாகியிருந்தமைக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

0 comments :
Post a Comment