முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது துணைவியார் சிராந்தி ராஜபக்ஷவும் தெவட்டகஹ தர்காவில் விஷேட சமய நிகழ்வில் பங்கேற்பு



ஏ.எஸ்.எம்.ஜாவித்-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது துணைவியார் சிராந்தி ராஜபக்ஷவும் விஷேட சமய நிகழ்வு ஒன்றிற்காக நேற்று முன்தினம் (27) கொழும்பு 07 இல் உள்ள தெவட்டகஹ தர்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவருடன் புத்தசான, மத கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுரவிக்ரம நாயக்கவும் வருகை தந்திருந்தார்.

தெவட்கஹ பள்ளிவாசலின் தலைவர் றியாஸ் சாலி உட்பட பள்ளிவாசல் நிருவாகிகள் பிரமுகர்களை வரவேற்றதுடன் தர்காவிற்க வருகை தந்த முன்னாள் ஜனாதிபதிக்க ஆசி வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனையை கலாநிதி ஹஸன் மௌலானா நிகழ்த்தினார். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிக்கு பள்ளிவாசல் தலைவர் றியாஸ் சாலி விஷேட நினைவுச்சிக்னம் ஒன்றையும் பள்ளிவாசலின் வரலாற்று ஆவணம் ஒன்றையும் வழங்கினார்.இதன்போது முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் பர்ஸான் மன்சூர், நகீப் மௌலானா, நஜீப் மௌலானா உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :