மர்ஹும் ஆர்.எம்.றினோஸ் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்று போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு



எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினராக இருந்து கழகத்தின் வளர்ச்சியில் அரும் பணியாற்றி மறைந்த மர்ஹும் ஆர்.எம்.றினோஸ் அவர்களின் ஞாபகார்த்தமாக மியன்டாட் விளையாட்டுக் கழகத்தால் பிரமான்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படவிருக்கும்
மர்ஹும் ஆர்.எம்.றினோஸ் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் (Marhoom R.M. Rinos Memorial Trophy - 2022)அங்குரார்ப்பண அறிமுக நிகழ்வு கடந்த (04)வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு அல்-ஹூஸையின் வித்தியாலயத்தில் கழகத்தின் உப தலைவர் யூ.எல்.பாஹிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரும், முகாமைத்துவ சபையின் உறுப்பினருமாகிய யூ.கே.நஜீம் (ஆசிரியர்) அவர்களும், விஷேட விருந்தினர்களாக மர்ஹூம் றினோஸ் அவர்களுடைய தந்தை ஏ.றஹீம் மற்றும் சகோதரர், ஆர்.எம்.றனீஸ் அவர்களும் மற்றும் மியன்டாட் விளையாட்டுக் கழகத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினர்களான எம். ஏ.ஜனூஸர்,ஐ.றியாஸ், எஸ்.பஸ்மீர்,எம்.எச்.எம்.பிர்தௌஸ்,ஏ.எம்.ஜஹான், ஏ.எல்.நியாஸ்,ஏ.முஸாபீர், எஸ்.உவைஸ், ஏ.ஆரிஸ், ஏ.எம்.அஸீம்,எஸ்.எல்.நிஸார்,ஐ.அர்ஸாத்,ஏ.ஏ.பர்வீஜ் மற்றும் கழகச் செயலாளர் யூ.கே.ஜவாஹிர், கழகத்தின் உப தலைவர் ஏ.எல்.எம்.றிஸ்வி மற்றும் கழக வீரர்கள், இளையோர் அணி வீரா்கள் அத்துடன் இச்சுற்றுத் தொடரில் பங்குகொள்ளும் அணிகளான பீமா(Fima) விளையாட்டுக் கழகத்தின் தலைவர் யூ.கே.எம்.முபீன், செயலாளர் உட்பட ஏனைய உயர்பீட உறுப்பனர்களும் மற்றும் மாவடி பேர்ள்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.ஜே.எம் அஸ்ரப், செயலாளர் உட்பட ஏனைய உயர்பீட உறுப்பனர்களும் மற்றும் வர்ணணையாளர் என்.எம்.சிராஜ் ,ரெட் மெக்ஸ் Red Maxx நிறுவனத்தின் முகாமையாளரும் வர்ணணையாளருமான ஏ.என்.எம் ஜாவித், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மர்ஹும் ஆர்.எம்றினோஸ் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம்,கிரிக்கெட் சுற்றுத்தொடரின் உத்தியோகவூர்வ டி- சேர்ட் (T-Shirt), கழகத்தின் புதிய சீருடை போன்றன அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :