மருதமுனை அல்ஹம்றா வித்தியாலய மாணவி பாத்திமா ஜஸ்னா வலீத் தேசிய மட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.




பி.எம்.எம்.ஏ.காதர்-
கில இலங்கை தமிழ்மொழித் தினப்போட்டியில் மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி பாத்திமா ஜஸ்னா முகம்மது வலீத் தேசிய மட்ட பேச்சுப் போட்டி பிரிவு நான்கில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.

 ஞாயிற்றுக் கிழமை(06-11-2022) கொழும்பு,பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மொழித் தினப் போட்டியின் போதே இவர் வெண்கலப் பதக்கத்தைப் தனதாக்கிக் கொண்டார்.

இந்த பரிசளிப்பு நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவி பரீட்சை ஆணையாளர் ஜிபோல அன்ரனி,கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் பணிப்பாளரும்,தேசிய கல்வி நிறுவக சிரேஷ;ட விரிவுரையாளருமான எஸ்.முரளீதரன்,மருதமுனை அல்ஹம்றா வித்தியாலய அதிபர் ஐ.உபைதுல்லா அகியோரும் கலந்து கொண்டு மாணவி பாத்திமா ஜஸ்னா முகம்மது வலீதிற்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.

இம் மாணவி கல்வி.விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இம்மாணவி கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாம் ஆண்டுக்கான சமூக விஞ்ஞான வினா விடைப் போட்டியில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பொற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் மருதமுனையைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத். அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறின் தாஜ் தம்பதியின் புதல்வியாவார்.இம்மாணவி தேசிய மட்டப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வெண்றதையிட்டு பாடசாலை அதிபர் ஐ.உபைதுல்லா பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களும் பாராட்டையும். வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :